Canada

எட்மண்டன் பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு!

தெற்கு எட்மண்டன் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம், தெற்கு எட்மண்டன் Crabapple Crescen பகுதியில் திங்கட்கிழமை இரவு சுமார் 7:30-மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, குறித்த சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்து வந்த பொலிஸார் 20-வயது நபர் காயங்களுடன் இருந்ததாக அடையாளம் கண்டனர்.

இதில், குறித்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிக்சை மேற்கொண்ட பின்னர், சிகிக்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் வழங்கு பதிவு செய்துள்ள பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top