Canada

ஒன்ராறியோ அரசின் அறிவிப்பு !

ஒட்டாவாவின் ஆதரவு இருந்த போதிலும் ஒன்ராறியோவில் பிரெஞ்சு மொழி பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கு நிதியளிக்க முடியாது என ஒன்ராறியோ அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து பயிற்சி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் அமைச்சர் Merrilee Fullerton நேற்று கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், “தற்போதைய காலகட்டத்தில், முற்போக்கு கொன்சவேற்றிவ்விடம் யுனிவர்சல் டி லா ஒன்டா ஒன்ராறியோ பிரான்சிஸ் திட்டத்தை ஆதரிக்க நிதி இல்லை” என தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே தொழில்நுட்பம் பகுதிகளில் ஆராய்ச்சி கண்டுபிடிப்பு மையங்களை அபிவிருத்தி செய்வதற்காக ஒட்டவா 1.9 மில்லியன் டொலர்களை வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top