News

ஒன்றாறியோவில் கடும் குளிரான காலநிலை நிலவும் என எதிர்வு கூறல்!

ஒன்றாறியோவில் எதிர்வரும் சில தினங்களுக்கு கடும் குளிரான காலநிலை நிலவும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

கனேடிய சுற்றுச்சூழல் திணைக்களம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இதன்காரணமாக அநாவசிய வெளிப்பயணங்களை தவிர்த்துக் கொள்ளுமாறும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பகல் வேளைகளில் 2 பாகை செல்சியசாக காணப்படும் வெப்பநிலை, இரவு நேரங்களில் -13 செல்சியசாகக் குறைந்து காணப்படும் என்றும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

சுமார் 20 கிலோமீற்றர் வேகத்தில் -22 செல்சியசில் குளிர் காற்று வீசும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

மேலும், மாலை அல்லது இரவு வேளையில் உறைபனி மழையுடன் ஆலங்கட்டி மழை பெய்யக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top