Canada

கனடாவில் கடுமையான குளிர் : வெப்பநிலை -21°C ஆக பதிவு!

கனடாவில் கடுமையான பனிப்பொழிவுடன், பனிப்புயலும் வீசிவருகின்ற நிலையில் அங்கு வெப்ப நிலை -21°C  ஆக பதிவாகியுள்ளது.

அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் கனடாவில் கடந்த சில நாட்களாகவே கடும் குளிருடனான காலநிலை நிலவி வருகின்றது.

இந்தநிலையில் இன்று(திங்கட்கிழமை) கனடாவில்  வெப்ப நிலை -21°C ஆக பதிவாகியுள்ளது என கனேடிய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கடும் பனிப்பொழிவு காரணமாக வீதிகளில் பனிக்கட்டிகள் குவிந்துள்ளது. இதனால் அங்கு போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும், கனடாவின் சில பகுதிகளில் 26 km/h வேகத்தில் கடும்  பனிப்புயல் வீசும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சில முக்கிய விமான நிலையங்களில் விமான சேவைகள்  ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும்   செய்தி வெளியிட்டுள்ளன.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top