Canada

கனடாவில் கடும் பனிப்பொழிவு எச்சரிக்கை – பள்ளி வாகன சேவைகள் ரத்து!

கனடாவில் நிலவி வரும் கடும் பனிப்பொழிவு காரணமாக சில முக்கிய பகுதிகளில் பள்ளி பேருந்து சேவைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த, கனடாவில் கடுமையான பனிப்பொழிவுடன், பனிப்புயலும் வீசிவருகின்ற நிலையில் உள்ளூர் நேரப்படி இன்று ( திங்கட்கிழமை) அதிகாலை முதல் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக வீதிகளை பனிக்கட்டிகள் மூடியுள்ளமை தொடர்ந்து அங்கு போக்குவரத்துக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து, மாணவர்கள் பாடசாலைகளுக்கு செல்வதில் கடும் சிரமங்களை எதிர்நோக்க நேரிடும் என கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலையில், Ottawa – பகுதியை சுற்றி அமைந்துள்ள பள்ளி பேருந்து சேவை ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, Catholic and Public school பள்ளி பேருந்து சேவை ரத்துச் செய்யப்பட்டுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top