Canada

கனடாவில் தஞ்சமடைந்துள்ள சவுதி பெண்ணின் நெகிழ்ச்சி பேச்சு !

சவுதியில் இருந்து கனடாவில் தஞ்சமடைந்துள்ள ரஹாஃப் மொஹமட் அல்-குனன் என்பவர் மீண்டும் புதிதாக பிறந்ததது போன்ற தொரு உணர்வு ஏற்பட்டதாக கருத்து தெரிவித்துள்ளார்.

இஸ்லாத்தை துறந்த சவுதி பெண்ணான ரஹாஃப் மொஹமட் அல்-குனன் (வயது-18) அவுஸ்ரேலியாவுக்கு செல்லும் வழியில் தாய்லாந்தில் தடுத்து வைக்கப்பட்டார்.

இதையடுத்து, தாய்லாந்து கோரிக்கை யை ஏற்று அவருக்கு கனடா அடைக்கலம் கொடுத்துள்ளது. அதனைத் தொடர்ந்து கடந்த சனிக்கிழமை அவர் ரொறொன்ரோவைச் சென்றடைந்தார்.

அவரை, ரொறொன்ரோ விமான நிலையத்திலிருந்து வெளிவிவகார அமைச்சர் கிறிஸ்டியா பிரீலான்ட்,துணிச்சல்மிக்க புதிய கனேடிய பிரஜை என்று கூறி அழைத்துச் சென்றார்.

இந்நிலையிலேயே, அவருக்கு கனடா அடைக்கலம் கொடுத்துள்ளது. அதனைத் தொடர்ந்து கடந்த சனிக்கிழமை அவர் ரொறொன்ரோவைச் சென்றடைந்தார்.

அவரை ரொறொன்ரோ விமான நிலையத்திலிருந்து வெளிவிவகார அமைச்சர் கிறிஸ்டியா பிரீலான்ட் அழைத்துச் சென்றார்.

இந்தநிலையில், கனடாவிற்கு வருகை தந்ததன் பின்னர் அந்நாட்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வி ஒன்றிலேயே தாம் மீண்டும் பிறந்ததது போன்றதொரு உணர்வு ஏற்பட்டுள்ளதாக கனடாவில் தஞ்சமடைந்துள்ள ரஹாஃப் மொஹமட் அல்-குனன் (வயது-18) தெரிவித்துள்ளார்.

அத்துடன், சவுதி அரேபியாவிலிருந்து தம்மைப்போன்று அச்சம் காரணமாக வெளியேறும் பெண்களின் எண்ணிக்கை எதிர்காலத்தில் அதிகரிக்கும் வாய்ப்புகள் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top