Canada

கனடாவில் மாயமான தாய் மற்றும் மகள்: பொலிசார் வெளியிட்ட முக்கிய தகவல்

கனடாவில் தாய் மற்றும் மகள் காணாமல் போன நிலையில் மகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Igloolik கிராமத்தை சேர்ந்தவர் சூசன் குப்லூ. இவர் மகள் லெணீஸ் குப்லூ.

சூசனும், லெணீஸும் ஒட்டாவாவில் காணாமல் போய்விட்டதாக இந்த வார தொடக்கத்தில் பொலிசில் புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து இருவரையும் தேடும் பணியில் பொலிசார் ஈடுபட்ட நிலையில் லெணீஸ் தற்போது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து லெணீஸின் சகோதரர் ஜோஷை கூறுகையில், என் தாய் சூசன் இரண்டாண்டுகளாக தனியாக வசித்து வருகிறார்.

இந்நிலையில் சூசனும், லெணீஸும் திடீரென காணாமல் போன நிலையில் லெணீஸ் கிடைத்துவிட்டார். சூசனும் கிடைத்து விடுவார் என நம்புகிறேன்.

பரோல் கூட்டத்துக்கு தனியாக சென்ற சூசன் வீடு திரும்பவேயில்லை, அவரை தேடி லெணீஸ் சென்ற நிலையில் தான் இருவரும் மாயமாகினர் என கூறியுள்ளார்.

இதனிடையில் சூசனை தேடும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top