Canada

கனடாவில் 16 மணித்தியாலங்கள் ஓடுபாதையில் சிக்கிய விமானம்!

கனடாவில் சுமார் 16 மணித்தியாலங்கள் விமானம் ஒன்று ஓடுபாதையில் சிக்கிக்கொண்டமை காரணமாக பயணிகள் பெரும் சௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில், அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாநிலத்தின் நியூவார்க் நகரிலிருந்து ஹாங் கொங்கிற்கு விமானம் ஒன்று 250 பயணிகளுடன் கடந்த சனிக்கிழமை அன்று புறப்பட்டது.

அப்போது, நடுவானில் பயணி ஒருவருக்கு அவசரமாக மருத்துவ உதவி தேவைப்பட்டதால், விமானம் கனடாவின் கிழக்குப் பகுதியிலுள்ள கூஸ் பே (Goose Bay) விமான நிலையத்தில் தரையிறங்கியது.

மருத்துவ உதவியாளர்கள், பயணியை விமானத்திலிருந்து வெளியேற்றி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

இருப்பினும், அதன் பின்னரும் விமானத்தினால் அங்கிருந்து புறப்பட்டு செல்ல முடியவில்லை. கனடாவில் நிலவி வரும் கடும் பணி காரணமாக பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

இந்தநிலையில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை மாற்று விமானம் ஒன்று கனடாவின் கூஸ் பேயை சென்றடைந்தது.

இதனைத் தொடர்ந்து மாற்று விமானத்திற்குப் பயணிகள் மாற்றப்பட்டனர். கூஸ் பேயிலிருந்து புறப்பட்ட விமானம், பின்னர் நியூவ்யோர்க்கைச் சென்றடைந்திருந்தமைக் குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top