Canada

கனடாவில் 2019-ம் ஆண்டில் அதிக பனிப்பொழிவு பதிவு!

கனடாவில் 2019-ம் ஆண்டில் பல இடங்களில் உறைபனி 300 சென்ரிமீற்றர் உயரத்திற்கு காணப்படுகின்றன. இதனால், தீவிர குளிர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் அக்டோபர் மாதம் முதல் சில இடங்களில் 350 சென்டி மீட்டர் அதாவது 11 அடி பனிப்படலம் காணப்படுகிறது. நேற்று முன்தினம் 167 சென்டி மீட்டர் உயரத்திற்கு பனிப்படலம் காணப்பட்டது.

கடந்த 1955-ஆம் ஆண்டின் பின்னர் கனடாவில் அதிக பனிப்பொழிவு பதிவான நான்காவது சந்தர்ப்பமாக இவ்வருடம் காணப்படுகிறது.

பனி காரணமாக வீதிகள் வலுக்கும் நிலையில் காணப்படுவதோடு, வீதிகள், மரங்கள் என சகல பகுதிகளிலும் பனிப்படலம் தேங்கி நிற்கின்றது. இதன் காரணமாக, விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன.

இதனால் மக்களை அவதானமாக செயற்படுமாறும், சாரதிகள் இச்சந்தர்ப்பங்களில் வாகனங்களை செலுத்துவதை தவிர்த்துக்கொள்ளுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top