News

கனடா மீது சீனாவின் குற்றச்சாட்டு

மேற்கத்தேய ஏகபோகம் மற்றும் வெள்ளையின மேலாதிக்கத்துடன் கனடா செயல்படுவதாக சீனா அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

குறித்த தகவலை சீன தூதுவர் ஒருவர் கூறுகையில், சீனாவில் இரு கனேடிய பிரஜைகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களை விடுவிப்பதற்காகவே கனடா, மேற்கத்தேய ஏகபோகம் மற்றும் வெள்ளையின மேலாதிக்கத்துடன் செயல்படுவதாக குற்றஞ் சாட்டியுள்ளார்.

எனினும், அவரை விடுவிப்பது தொடர்பாக எவ்வித கரிசனையும் கொள்ளாமல் சீனாவில் உள்ளவர்களை மாத்திரம் விடுவிக்குமாறு கோருவதாக சீனா குற்றஞ்சாட்டியுள்ளது.

முன்னதாக,அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் விதித்த தடைகளை மீறி ஈரானுக்கு தொலைதொடர்பு கருவிகளை விற்பனை செய்ததாக ஹூவாவி தொலைதொடர்பு நிறுவன தலைமை நிதி அதிகாரி Meng Wanzhou, கனடாவின் வாங்கூரில் கைது செய்யப்பட்டார்.

இவரது கைது சம்பவத்தை தொடர்ந்து இரண்டு கனடியர்கள் சீனாவில் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Latest News

To Top