Canada

கனேடியர் ஒருவருக்கு சீனா தூக்குத்தண்டனை- இரு நாட்டு உறவில் விரிசல்!

சீனாவில் போதை மருந்து கடத்தல் வழக்கில் சிக்கிய கனேடியருக்கு அந்த நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

15 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டிருந்த இந்த வழக்கில் மேல்முறையீடு செய்துள்ள நிலையில் Liaoning பிராந்திய நீதிமன்றம் கனேடியருக்கு மரண தண்டனை விதித்துள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டு போதை மருந்து கடத்தல் வழக்கில் 36 வயதான ராபர்ட் லாய்ட் என்பவர் சீனாவின் Liaoning பிராந்திய பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் அவருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டு சிறையில் இருந்துள்ளார். இந்த நிலையில் தமது தண்டனை காலத்தை குறைக்கும்படி கேட்டு மேல்முறையீடு செய்துள்ளார் ராபர்ட் லாய்ட்.

ஆனால் குறித்த வழக்கை மறு விசாரணைக்கு உத்தரவிட்ட நீதிமன்றம் தற்போது மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

மட்டுமின்றி போதை மருந்து கடத்தல் தொடர்பாக ராபர்ட் லாய்ட்டின் பங்கு குறித்து மேலதிக ஆதாரங்கள் சிக்கியுள்ளதாகவும்,

சர்வதேச போதை மருந்து கடத்தல் கும்பலுடன் இவருக்கு இருக்கும் தொடர்பு நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இருப்பினும் ராபர்ட் லாய்ட் தமக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனைக்கு எதிராக மீண்டும் மேல்முறையீடு மேற்கொள்ளலாம் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ராபர்ட் லாய்ட் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அவரது உறவினர், அவர் மீதான தண்டனை தீர்ப்பும் விசாரணையும் தங்களுக்கு சந்தேகத்தை அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

கனடா நாட்டு நபரான ராபர்ட் லாய்ட் ஷெல்பெர்க் என்பவருக்கு சீனா, கடந்த நவம்பரில் 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

தற்போதைய, மரணம் தண்டனை தீர்ப்பு சீனா மற்றும் கனடா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையேயான ராஜிய உறவை பாதிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

சீனாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கனடா நாட்டு நபரின் குடும்பம் தங்களின் மிக மோசமான அச்சம் தற்போது, நடந்துவிட்டதாக ஆதங்கப்பட்டுள்ளனர்.

குறித்த, சீன நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது கண்டனங்களை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையொன்றில், ஓர் அரசாக இந்த தீர்ப்பு மற்றும் சூழல் எங்களுக்கு மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது.

சீனா எங்கள் நாட்டை சேர்ந்தவருக்கு மரண தணடனை விதித்துள்ள நிலையில், இது எங்கள் தோழமை நாடுகளுக்கும் கவலை அளிப்பதாக அமைகிறது என்று கூறியுள்ளார்.

மேலும், குறித்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய ராபர்ட்க்கு 10 நாட்கள் அவகாசம் உள்ளது. ராபர்ட் மேல்முறையீடு செய்வார் என்று அவரின் வழக்கறிஞர் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top