Canada

கனேடிய தமிழர்களுக்கு ஜஸ்டின் ட்ரூடோவின் பொங்கல் வாழ்த்து!

உலகெங்கும் வாழும் தமிழர்களின் வாழ்வில் தை பொங்கல் திருநாளில் நலமும் வளமும் பெருக வேண்டும் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, கனடா வாழ் தமிழர்களுக்கு தனது பொங்கல் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

தை மாதம் முதல் நாள் கொண்டாடப்படும் இந்த விழா, உலகெங்கும் வாழும் தமிழர்களால் கொண்டாடப்படும் தனிப்பெரும் விழா ஆகும்.

தமிழ்நாடு, சீனா,இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, மொரிசியசு என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் தமிழர் திருநாளாக இந்த விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு இத்திருநாளின் வாழ்த்துக்களை உலக தலைவர்கள் பகிர்ந்துள்ளனர்.

அந்த வகையில், கனேடிய முதல்வர் ஜஸ்டின் ட்ரூடோ, அவர்களின் பொங்கள் திருநாள் வாழ்த்து செய்தி அறிக்கையில்,

பொங்கல் பண்டிகை என்பது கொண்டாட்டங்கள், மகிழ்ச்சி மற்றும் சமுதாயத்துக்கான நேரம். குடும்பங்களும் நண்பர்களும் கூடி அறுவடைக்காக நன்றி கூறி, பொங்கலிட்டு சர்க்கரைப் பொங்கலை அனைவரோடும் பகிர்ந்து கொள்ளும் நேரம் அது.

அறுவடைக் காலம் முடிந்து புத்தாண்டு ஆரம்பமாகும் நேரத்தில், நாம் தமிழ் பாரம்பரிய மாதத்தையும் கொண்டாடுகிறோம்.

இந்த சிறப்புக் காலப்பகுதியில், கனடிய தமிழர்கள் நமது நாட்டின் வெற்றி மற்றும் செழிப்புக்கு பல பங்களிப்பை செய்துள்ளனர் அதனை நாங்கள் நினைவு கூறுகிறோம்.

மேலும், என் சார்பிலும் என் மனைவி, குடும்பம் சார்பிலும் தைப்பொங்கலைக் கொண்டாடும் அனைவருக்குமே என் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

கனடாவில் வாழும் தமிழர்கள், இலங்கை மற்றும் தென்னிந்தியாவிலிருந்து வந்தவர்கள், அவர்கள் பெரும்பாலும்  ரொறன்ரோ  பகுதியில் வாழுகிறார்கள்.

ரொறன்ரோ  , ஆசியாவுக்கு வெளியே தமிழர்கள் அதிகம் வாழும் இரண்டாவது பகுதியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top