Canada

கல்கரியில் திருடப்பட்ட பொலிஸ் வாகனம்: குற்றவாளி கைது !

கல்கரியில் பொலிஸ் வாகனம் திருட்டு வேளையில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டு, அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வாகனம், கல்கரியில் 28 அவென்யூ மற்றும் 14 தெரு எஸ்.எஸ்.டபிள்யூ அருகே ஜனவரி 21, 2019 அன்று திங்கள் கிழமை, மதியம் 1-25 மணிக்கு திருடப்பட்டது.

இதையடுத்து, ஹெலிகாப்டர் தீவிர தேடுதலுக்கு பிறகு சுமார் 30 நிமிடங்கள் கழித்து, குறித்த வாகனம் ஒரு பூங்காவில் கண்டுபிடிக்கப்பட்டது.

இதில், குறித்த சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு கடுமையான தண்டனை வழங்க இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top