Canada

காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க அரசாங்கம் தீவிரமாக செயல்படும்: அமைச்சர்கள்

காணாமல் போனவர்களை வெகுவிரைவில் கண்டுபிடிப்பதற்கு கனேடிய அரசாங்கம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் என அமைச்சர்கள் உறுதி அளித்துள்ளனர்.

புர்கினோ ஃபாசோவில் காணாமல் போன எடித் ப்ளசிஸின் குடும்பத்தினரை கனேடிய அமைச்சர்கள் நேற்று (வெள்ளிக்கிழமை) சந்தித்து கலந்துரையாடினர்.

வெளியுறவுத்துறை அமைச்சர் கிறிஸ்ரியா ஃப்றீலண்டம் மற்றும் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் மறி க்ளோட் ஆகியோரே இச்சந்திப்பில் கலந்துக் கொண்டிருந்தனர்.

மற்றுமொரு கனேடியர் புர்கினோ ஃபாசோவில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டதாக நேற்று முன்தினம் வெளியான செய்தியை தொடர்ந்து இந்த அவசர சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

தென்மேற்கு புர்கினோ ஃபாசோவிற்கு காரில் பயணித்த எடித் ப்ளசிஸ் (வயது-34) மற்றும் அவரது இத்தாலி நண்பர் லூகா டச்சிடோ ஆகிய இருவரும் கடந்த டிசம்பர் மாதம் 15ஆம் திகதி காணாமல் போயினர்.

நிவாரண குழுவொன்றுடன் இணைந்து பணியாற்றுவதற்காக சென்றிருந்த வேளையிலேயே அவர்கள் காணாமல் போயுள்ளனர். இந்நிலையில் அவர்கள் கடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top