அமெரிக்காவில் நடைபெறும் சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில், ஹூண்டாய் நிறுவனம் ரோபோ போன்ற காரை அறிமுகம் செய்தது.
லாஸ் வேகாஸ் நகரில் சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழா நடைபெறுகிறது. இதில் ஹூண்டாய் நிறுவனம் தனது புதிய கான்செப்ட் காரை அறிமுகம் செய்தது. இந்த கார் நடக்கவும், சுவர் ஏறும் திறன் கொண்டிருக்கிறது. அதாவது ரோபோடிக் கால்கள் இதற்கு சக்கரங்களாக பொருத்தப்பட்டுள்ளன.

ரோபோடிக்ஸ் தொழில்நுட்பம் இணைக்கப்பட்டிருப்பதால், இந்த கார் அதிகபட்சம் ஐந்து அடி உயரமுள்ள பகுதிகளை ஏறி கடக்கும் திறன் கொண்டுள்ளது. மேலும் உயரமான பகுதிகளில் இந்த கார் ஏறும்போது, உள்ளே அமர்ந்திருப்பவர்களுக்கு எவ்வித அசைவையும் உணரச் செய்யாது.
இதேபோல், எலிவேட் கான்செப்ட் கார் ஒன்றும் அறிமுகம் செய்யப்பட்டது. அல்டிமேட் மொபைலிட்டி வாகனமான இது, அதிநவீன இ.வி.பிளாட்ஃபார்ம் சார்ந்து உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் பயன்பாட்டு சூழலுக்கு ஏற்ப வெவ்வேறு வடிவங்களை இந்த காரில் மாற்றிக் கொள்ளலாம்.

நான் இயந்திர கால்கள் சக்கரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. எனவே இது வழக்கமான கார் போன்று செல்லவும், நீட்டிக்கப்பட்ட கால்களுடன் நடக்கவும் செய்யும். இதுகுறித்து ஹூண்டாய் நிறுவன ரோபோடிக் ஆய்வு பிரிவு துணைத் தலைவர் ஜான் சு கூறுகையில்,
‘தற்போதைய மீட்பு வாகனங்களால் சுனாமி அல்லது நிலநடுக்கம் போன்ற இயற்கை பேரழிவுகளின்போது ஓரளவு பகுதிகளை கடக்க முடியும்.
மற்ற பகுதிகளை நடந்தே தான் கடக்க வேண்டும். எல்வேட் எவ்வித கடினமான பகுதிகளையும் கடக்கும்’ என தெரிவித்துள்ளார்.