News

கென்யா ஓட்டலில் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் – அல் ஷபாப் அமைப்பு பொறுப்பேற்றது

கென்யா தலைநகர் நைரோபியில் அமைந்துள்ள ஓட்டலில் சோமாலியா பயங்கரவாதிகளான அல் ஷபாப் அமைப்பினர் இன்று திடீரென தாக்குதல் நடத்தினர். 

கென்யா நாட்டு தலைநகர் நைரோபியில் அமைந்துள்ள ஓட்டலில் இன்று பயங்கரவாதிகள் சிலர் அதிரடியாக புகுந்தனர். அவர்கள் துப்பாக்கியால் சுட்டும், வெடிகுண்டுகள் வீசியும் தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் ஓட்டல் வளாகத்தின் வெளியே நிறுத்தப்பட்ட வாகனங்கள் பற்றியெரிந்தன. இதுதொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவின.

கென்யா நாட்டின் தலைநகரில் பயங்கரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் பிரித்தானியர் உள்ளிட்ட 15 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தாக்குதலில் கொல்லப்பட்டு குவிந்து கிடக்கும் சடலங்களை அவர்களின் அடையாள அட்டையை பயன்படுத்தி அடையாளம் காணப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தலைநகர் நைரோபியில் அமைந்துள்ள ஹொட்டல் ஒன்றில் திட்டிரென்று புகுந்த பயங்கரவாதிகள் வெடிகுண்டு மற்றும் துப்பாக்கியால் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தாக்குதலை முன்னின்று நடத்தியவர்கள் சோமாலியப் போராளி குழு அல் ஷபாப் என்பது பின்னர் தெரியவந்துள்ளது.

குறித்த தாக்குதலில் 4-ல் இருந்து 6 பேர் துப்பாக்கியால் சரமாரியாக தாக்குதலில் ஈடுபட்டதாகவும் இருமுறை வெடிகுண்டுகளை வீசியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஹொட்டலுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் அனைத்தும் நெருப்புக்கு இரையாக்கப்பட்டுள்ளது.

ஹொட்டல் ஊழியர்களையும் அந்த பயங்கரவாத கும்பல் பிணைக்கைதிகளாக பிடித்துள்ளதாக தகவல் வெளியானது.

கொல்லப்பட்டவர்களில் ஒருவர் பிரித்தானியர் எனவும் ஒருவர் அமெரிக்கர் எனவும் எஞ்சியவர்கள் கென்யா நாட்டவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், கென்யாவின் நைரோபி நகரில் ஓட்டலில் நடைபெற்ற தாக்குதலுக்கு சோமாலியா நாட்டை சேர்ந்த அல் ஷபாப் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top