Canada

கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது!

கனடாவின் லண்டன் பகுதியில் இடம்பெற்று வந்த கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

22 வயதான சந்தேக நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக லண்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபருக்கு எதிராக மூன்று முக்கிய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரிடம் தொடர்ச்சியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள பொலிஸார், மேலதிக தகவல்கள் எதனையும் வெளியிடவில்லை.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top