News

சந்திரிகாவின் பதவியை பறிக்க தீர்மானம்?

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை நீக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விடயம் தொடர்பில் அக்கட்சியில் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் சுதந்திரக்கட்சியின் 15 தொகுதி அமைப்பாளர்கள், சந்திரிகாவை பதவியிலிருந்து அகற்றுவதற்கான யோசனையை முன்வைத்துள்ளதாகவும் அந்த சிங்கள ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் செயற்பாடுகள் தொடர்பிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்பிலும் கடுமையான விமர்சனங்களை தொடர்ச்சியாக முன்வைத்து வருகின்றார்.

இதன் அடிப்படையிலேயே சந்திரிகாவை பதவியிலிருந்து நீக்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகின்றது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top