News

சவேந்திர சில்வாவின் நியமனம் குறித்து அமெரிக்க வெளிவிவகாரக் குழுத் தலைவர் அதிருப்தி

இலங்கை இராணுவத் தலைமை அதிகாரியாக போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக ஐ.நா.வினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளமை கவலையளிப்பதாக அமெரிக்க நாடாளுமன்றத்தின் வெளிவிவகாரக் குழுத் தலைவர் எலியட் ஏஞ்சல் தெரிவித்துள்ளார்.

மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, இலங்கை இராணுவத் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்நியமனம், அமெரிக்கா- இலங்கைக்கு இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்புக்கு பாதிப்பை ஏற்படுத்துமெனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அந்தவகையில் போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்களில் முக்கிய பங்கு வகித்தவரென ஐ.நா.வினால் அடையாளப்படுத்தப்பட்ட சவேந்திர சில்வாவுக்கு  உயர் பதவி வழங்கப்பட்டுள்ள நிலையில், போர்க்குற்றவாளிகளை பொறுப்புக்கூற வைப்பதில் நேர்மை எவ்வாறு நிரூபிக்கப்படும் எனவும் எலியட் ஏஞ்சல் கேள்வி எழுப்பியுள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top