News

சாலை விபத்தில் சிக்கிய பிரித்தானிய இளவரசர்: கண்ணீர் கடலில் அரச குடும்பம்

பிரித்தானிய ராணியார் இரண்டாம் எலிசபெத்தின் கணவரும் இளவரசருமான பிலிப் சாலை விபத்தில் சிக்கியுள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானிய அரச குடும்பத்துக்கு சொந்தமான சாண்ட்ரிங்ஹாம் எஸ்டேட் அருகே உள்ளூர் நேரப்படி பகல் 3 மணியளவில் இந்த சாலை விபத்து நேர்ந்துள்ளது.

இதில் 97 வயதான இளவரசர் பிலிப் காயமின்றி தப்பினாலும் மனதளவில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் சுய நினைவுடன் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சம்பவப்பகுதியில் இருந்த மக்கள் துரிதமாக செயல்பட்டு விபத்துக்குள்ளாகி ஒருபக்கம் சாய்வாக கிடந்த காரில் இருந்து இளவரசர் பிலிப்பை பிரயாசைப்பட்டு வெளியே கொண்டுவந்துள்ளனர்.

இந்த விபத்தில் இளவரசருடன் இருந்த பாதுகாவலர்களும் காயமின்றி தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.

திடீரென்று ஏற்பட்ட விபத்தால் 97 வயதான இளவரசர் பிலிப் நிலைகுலைந்து காணப்படுவதாக அவரது பாதுகாவலர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது அரச குடும்பத்து மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் இன்றிரவு ராணியார் இரண்டாம் எலிசபெத் இளவரசருடன் சாண்ட்ரிங்ஹாம் எஸ்டேட்டில் தங்குவார் என கூறப்படுகிறது.

விபத்தில் சிக்கிய இன்னொரு காரில் இருந்த இருவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டுள்ளதாகவும் நோர்போக் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சாண்ட்ரிங்ஹாம் எஸ்டேட்டில் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடிய ராணியார் மற்றும் இளவரசர் பிலிப் ஆகியோர் இதுவரை இங்கேயே தங்கி ஓய்வெடுத்து வருகின்றனர்.

கடந்த 2017 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் அலுவல்களில் இருந்து ஓய்வு பெற்ற இளவரசர் அதன் பின்னர் எந்த பொது நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளவில்லை.

மேலும் இந்தமுறை கிறிஸ்துமஸ் தின ஆலய வழிபாட்டிற்கும் இளவரசர் பிலிப் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top