News

சிரியாவில் வீட்டில் தீ விபத்து – 7 சிறுவர்கள் பரிதாப பலி!

சிரியாவில் 4 மாடிகளை கொண்ட குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில், தீயில் கருகி சிறுவர்கள் 7 பேரும் பரிதாபமாக உயிர் இழந்தனர்.  

சிரியா தலைநகர் டமாஸ்கசின் மத்திய பகுதியில் உள்ள மனாக்லியா என்கிற இடத்தில் 4 மாடிகளை கொண்ட குடியிருப்பு உள்ளது. 4-வது மாடியில் உள்ள ஒரு வீட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த சிறுவர்கள் 7 பேர் இருந்தனர். சற்றும் எதிர்பாராத வகையில் அந்த வீட்டில் திடீரென தீப்பிடித்தது. 

கண்இமைக்கும் நேரத்தில் தீ மளமளவென வீடு முழுவதும் பரவியது. இதனால் சிறுவர்கள் வெளியேற முடியாமல் உள்ளே சிக்கிக்கொண்டனர். தீயில் கருகி சிறுவர்கள் 7 பேரும் பரிதாபமாக உயிர் இழந்தனர். 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top