Canada

செயின்ட் தோமஸ் மருத்துவமனை தீ விபத்தில் சிக்கி 7-பேர் காயம்!

செயின்ட் தோமஸ் மருத்துவமனை ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் சிக்கி 7 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த தீ விபத்து, போனி பிளேஸ்ஸில் அமைந்துள்ள செயின்ட் தோமஸ் மருத்துவமனை ஒன்றில் நேற்று முன்தினம் இரவு 10-மணியளவில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து, குறித்த சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்து வந்த 36-தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இதில், இரண்டு தொகுதிகளில் இருந்த 41-பேர் வெளியேற்றப்பட்டதாகவும், பலத்த போராட்டத்தின் பின்னர் தீ கட்டுப்பாட்டினுள் கொண்டுவரப்பட்டதாகவும் அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இதையடுத்து, சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுப்பதற்காக ஒன்ராறியோ மாகாண தீயணைப்பு படை அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குறித்த தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுவதாகவும் பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top