News

செல்பி எடுப்பதாக கூறி கனடிய பெண்ணிடம் இந்தியர் செய்த மோசமான செயல்: அதிர்ச்சி சம்பவம்

கனடா பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்த மும்பையில் உள்ள 5 நட்சத்திர ஓட்டல் பணியாளரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

மும்பை நகரில் ஜுகு பகுதியில் 5 நட்சத்திர ஹொட்டல் ஒன்று அமைந்துள்ளது. இங்கு கனடாவை சேர்ந்த 35 வயதான பெண் ஒருவர் தங்கியுள்ளார்.

அந்த பெண் நிகழ்ச்சி மேலாண்மை செய்யும் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். இதற்காக அடிக்கடி இந்தியா வந்து செல்வார்.

அந்த ஹொட்டலில் சுமித் ராவ் (32) என்ற பணியாளர் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், கனடா நாட்டு பெண், பொலிசில் புகார் தெரிவித்து உள்ளார்.

அதில், ஹொட்டல் அறையில் தங்கி இருந்த என்னிடம் வந்து ஓட்டல் பணியாளர் செஃல்பி எடுத்து கொள்ள வேண்டும் என கூறினார். ஆனால் அவர் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டார் என தெரிவித்துள்ளார்.

இந்த தகவலை ஓட்டல் நிர்வாகத்திடம் கொண்டு சென்ற அந்த பெண் பின்னர் சாண்டாகுரூஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார்.

இதனையடுத்து பொலிசார் 354 மற்றும் 354 (டி) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சுமித் ராவை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top