News

தலிபான் தாக்குதலில் 126 ஆப்கான் படையினர் பலி!

ஆப்கானிஸ்தான் நாட்டின் மைடான் வர்தாக் மாகாணத்தில் உள்ள சிறப்புப் படையினர் அலுவலகம் மீது தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய கார்குண்டு தாக்குதலில் 126 பேர் உயிரிழந்தனர்.  

ஆப்கானிஸ்தான் நாட்டின் மைடான் வர்தாக் மாகாணத்தில் பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணியில் ஈடுபட்டு வரும் ராணுவம் மற்றும் போலீசாரை கொண்ட சிறப்புப்படை அலுவலகம் இயங்கி வருகிறது

மைடான் ஷார் நகரில் உள்ள இந்த அலுவலகத்தின் வாசலில் இன்று காலை (உள்ளூர் நேரப்படி) சுமார் 9 மணியளவில் குண்டுகள் நிரப்பப்பட்ட காரை வெடிக்கச் செய்து தாக்குதல் நடத்திய தலிபான் பயங்கரவாதிகள் துப்பாக்கிகளால் சுட்டவாறு சிறப்பு படை அலுவலகத்துக்குள் ஊடுருவ முயன்றனர். 

இராணுவசோதனை சாவடி மீது காரை மோதி தாக்குதலை ஆரம்பித்த தீவிரவாதிகள் பின்னர் இராணுவ பயிற்சி தளத்தின் முக்கிய கட்டிடம் மீது மற்றொரு காரை மோதி தாக்குதலை மேற்கொண்டனர் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மைடன் வர்டாக் பிராந்தியத்தில் உள்ள இராணுவ பயிற்சி முகாமிற்குள் இடம்பெற்ற குண்டுவெடிப்புகள் காரணமாக 126 பேர்கொல்லப்பட்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளதாக ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

குண்டுதாக்குதல் இடம்பெற்ற பின்னர் உள்ளே நுழைந்த இரு துப்பாக்கிதாரிகள் மேற்கொண்ட தாக்குதலில் ஆப்கான் படையினர் பலர் கொல்லப்பட்டுள்ளனர்

100ற்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டுள்ளதை மற்றொரு அதிகாரியும் உறுதி செய்துள்ளார்.

மருத்துவமனையில் 35 படையினரின் உடலை பார்த்தாக அப்பகுதியை சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

பலர் கொல்லப்பட்டுள்ளனர் பல உடல்கள் காபுலிற்கு வந்துள்ளன என தெரிவித்துள்ள அவர் ஆப்கான் அரசாங்கம் உண்மையான எண்ணிக்கையை மறைக்கின்றது எனவும் தெரிவித்துள்ளார்

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top