Canada

நான்கு மாடிக் கட்டிடத்தில் திடீர் தீ விபத்து : 2 இலட்சம் டொலர்கள் சேதம்!

ஓக்வுட் கிராமத்தின் ஓக்வுட் அவென்யூ மற்றும் வோகன் வீதிப் பகுதியில், கட்டுமானப் பணிகள் இடம்பெற்றுவந்த நான்கு மாடிக் கட்டிடம் ஒன்றில், இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 2.45 அளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக தகவல் வழங்கப்பட்டதை அடுத்தது அங்கு சென்ற போது, குறித்த கட்டிடத்தின் கீழ்த் தளத்தில் தீ முழுமையாக பரவியிருந்ததாகவும், ஏனைய தளங்களிலும் ஆங்காங்கே தீ எரிந்தவாறு காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனினும் இதில் எவரும் பாதிக்கப்படவில்லை என்பதை தீயணைப்பு படையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்த தீயினால் ஏற்பட்ட சேதம் ஏறக்குறைய இரண்டு இலட்சம் டொலர்களாக இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தீ விபத்து தொடர்பில் விசாரணைகளில் தீயணைப்பு அதிகாரிகள் மற்றும் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top