News

நிலங்களைவிட்டு சிறிலங்கா இராணுவம் செல்கிறது!

வடக்கில் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள காணிகளில் 1201 ஏக்கர் காணிகள் இன்று (திங்கட்கிழமை) விடுவிக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதியால் குறித்த காணிகள் விடுவிக்கப்பட்டு அவற்றின் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று முல்லைத்தீவிற்கு விஜயம் செய்யவுள்ள நிலையில், இந்நிகழ்வு இடம்பெற்றது.

குறிப்பாக கிளிநொச்சி மாவட்டத்தில் 972 ஏக்கர் அரச காணிகளும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 120 ஏக்கர் அரச காணிகளுமே விடுவிக்கப்பட்டன.

அத்தோடு, யாழ்ப்பாணம் மற்றும் வன்னியில் 46.11 அரச காணிகளும் 63.77 தனியார் காணிகளும் விடுவிக்கப்பட்டன.

வடக்கு கிழக்கில் இன்னும் 14,000 ஏக்கர் காணிகள் படையினர் வசமுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவற்றை விடுவிக்குமாறு தொடர்ச்சியாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனினும், சிறிது சிறிதாக அவற்றை விடுவிக்கும் இலங்கை இராணுவம், தேசிய பாதுகாப்பு கருதி சில காணிகளை தம்வசம் வைத்துள்ளதாக கூறிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top