News

பழைய குளிர்சாதன பெட்டியில் இருந்த 3 குழந்தைகளின் சடலங்கள்: பெற்றோர்களுக்கு எச்சரிக்கை விடும் சம்பவம்!

அமெரிக்காவில் வீட்டிற்கு வெளியில் விளையாடி கொண்டிருந்த மூன்று குழந்தைகள், குளிர்சாதன பெட்டியில் சிக்கி பரிதாபமாக இறந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ப்ளோரிடா மாகாணத்தின் சுவானி கவுண்டி பகுதியை சேர்ந்த தாய் ஒருவர், தன்னுடைய இரண்டு குழந்தைகளையும் விளையாடவிட்டு பாத்ரூம் சென்றிருக்கிறார்.

பின்னர் திரும்பி வந்த பார்த்தபொழுது இரண்டு குழந்தைகளும் மாயமாகியிருக்கின்றனர். என்ன செய்வதென தெரியாமல் அப்பகுதி முழுவதும் நீண்ட நேரம் தேடுதல் வேட்டை நடத்திய தாய், இறுதியில் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

இதனையடுத்து சம்பவம் இடத்திற்கு வந்த பொலிஸார், அப்பகுதியில் உள்ள பழைய குளிசாதன பெட்டியை திறந்த பொழுது உள்ளே மூன்று குழந்தைகள் மூச்சில்லாமல் மயங்கிய நிலையில் கிடந்துள்ளன.

உடனடியாக மூவரையும் மீட்டு உள்ளூர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர் ஏற்கனவே குழந்தைகள் இறந்துவிட்டதாக கூறியுள்ளார்.

இதில் இறந்த இரண்டு குழந்தைகள் டால்டன் (6) மற்றும் கெயிலேயி (1) என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. மூன்றாவது குழந்தையை அடையாளம் கண்டறியும் வேளையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், குழந்தைகள் மூன்று பேரும் விளையாடிக்கொண்டே குளிர்சாதனை பெட்டிக்குள் நுழைந்திருப்பார்கள். பின்னர் உள்ளே சிக்கிக்கொண்ட அவர்கள் அதனை திறக்க தெரியாமல் இறந்திருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top