News

பிரான்ஸில் 11வது வாரமாகவும் ஆர்ப்பாட்டம்!

 

பிரான்ஸில் எரிபொருள் சீர்திருத்தத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுவரும் ஆர்ப்பாட்டம் 11வது வாரமாகவும் இன்று(சனிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தலைநகர் பாரிஸில் ‘யெலோ வெஸ்ட்’ என்ற அமைப்பினர் இன்று 11வது வாரமாகவும் ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளனர்.

பாரிஸ் வீதிகளில் குவிந்துள்ள ஆயிரக்காணவர்கள் அரசாங்கத்திற்கு எதிரான கோசங்களை எழுப்பி வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக தலைநகர் பாரிஸில் அதிகளவான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் ஆட்சிப்பொறுப்பை ஏற்ற பின்னர் மேற்கொள்ளப்பட்டுவரும் மிகப்பெரிய போராட்டமாக எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிரான போராட்டம் அமைந்துள்ளது.

கடந்த 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் முன்னெடுக்கப்பட்டுவரும் குறித்த போராட்டத்தால் வெடித்த வன்முறையில் இதுவரை 20 இற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top