News

பிரான்ஸ் ஜனாதிபதிக்கு நெருக்கமான நபர் கைது?

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானுக்கு நெருக்கமானவர் என கருதப்படும் Alexandre Benalla (27) நேற்று முன்தினம் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது கைது உண்மையானதா அல்லது அரசியல் ஸ்டண்டா என்னும் கேள்வி எழுந்துள்ளது.

முன்னாள் பவுன்சரான Benalla, 2016ஆம் ஆண்டு இமானுவல் மேக்ரானின் தேர்தல் பிரச்சாரத்தின்போது அவருக்கு பாதுகாவலராக செயல்பட்டார்.

பின்னர் 2017ஆம் ஆண்டு அவருக்கு ஜனாதிபதி மாளிகையில் பாதுகாப்பு உயர் அதிகாரியாக பதவி உயர்வு கொடுக்கப்பட்டது.

பின்னர் அவர் மே தினத்தன்று நடந்த பேரணி ஒன்றில் பொலிஸ் தலைக்கவசம் அணிந்து கொண்டு போராட்டக்காரர்களை தாக்கும் வீடியோ ஒன்று வெளியானது.

15 நாட்கள் இடைநீக்கம் செய்யப்படாலும், மீண்டும் இமானுவல் மேக்ரானுடன் அவர் சுற்றுப்பயணம் செய்யும் புகைப்படங்கள் வெளியாகின.

தாக்குதல் சம்பவத்திற்குப் பின்னும் மேக்ரான் Benallaவை தன்னுடன் வைத்திருந்ததால், மேக்ரான் அவரது குற்றத்தை மூடி மறைப்பதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டினர்.

இந்நிலையில், வேலையிலிருந்து நீக்கப்பட்ட பின்னரும் Benalla இரண்டு தூதரக பாஸ்போர்ட்கள் உட்பட நான்கு பாஸ்போர்ட்களை வைத்திருப்பதாகவும், அவற்றைப் பயன்படுத்தி அவர் ஆப்பிரிக்காவுக்கு பயணித்து உலக தலைவர்களை சந்தித்ததாகவும் செய்திகள் வெளியாகின.

Benallaவோ தான் ஒரு தொழில் ஆலோசகராக பணியாற்றுவதாக தெரிவிக்கிறார். ஆனால் சில அதிகாரிகள், Benalla தனது முந்தைய பதவியை பயன்படுத்தி லாபம் அடைவதாக அச்சம் தெரிவித்ததால், சென்ற மாதம் அரசு தொடர்பான ரகசிய தகவல்கள் எதையும் வெளியிடக்கூடாதென அவர் கடுமையாக எச்சரிக்கப்பட்டார்.

இந்நிலையில் தொடர்ந்து அவர் அதே தூதரக பாஸ்போர்ட்டைப் பயன்படுத்தி பயணிப்பது தெரிய வந்ததால், நேற்று முன் தினம் பொலிசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டு காவலில் அடைக்கப்பட்டார்.

வேலையிலிருந்து நீக்கப்பட்ட பின்னர், பாஸ்போர்ட்களை தான் திருப்பிக் கொடுத்துவிட்டதாகவும், ஆனால் ஜனாதிபதி மாளிகை அலுவலர் ஒருவரால் தன்னுடைய பாஸ்போர்ட்கள் மீண்டும் தன்னிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் Benalla தெரிவித்துள்ளார்.

இதனால் இந்த கைது சம்பவம் உண்மையானதா அல்லது வெறும் கண் துடைப்பு நாடகமா என்னும் கேள்வி எழுந்துள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top