News

பிரான்ஸ் முழுவதும் மஞ்சள் மேலங்கி போராட்டத்தில் ஈடுபட்ட 84 ஆயிரம் பேர்!

பிரான்சில் நேற்றைய தினம் சுமார் 84,000 மஞ்சள் மேலங்கி போராட்டக்காரர்கள் கலந்துகொண்டதாக உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

10வது வாரமாக பிரான்ஸ் நாட்டில் மஞ்சள் மேலங்கி போராட்டம் நடந்து வருகிறது. நேற்று நண்பகல் வரை 27,000 பேர் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன் பின்னர் அன்றைய நாள் முடிவில் சுமார் 84,000 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக உள்துறை அமைச்சர் Christophe Castaner தெரிவித்துள்ளார். ஆனால், இந்த எண்ணிக்கை கடந்த வாரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களின் அளவிலேயே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தலைநகர் பாரிஸில் 7,000 பேரும், Toulouse நகரில் 10,000 பேரும் நேற்றைய தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரிசில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஆங்காங்கே சில சிறிய அளவிலான வன்முறைகள் வெடித்திருந்தது.

எனினும், கடந்த நவம்பர் 17ஆம் திகதிக்குப் பின்னர் வன்முறைகள் இடம்பெறாத ஆர்ப்பாட்டம் இது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டம் குறித்து உள்துறை அமைச்சர் கூறுகையில், ‘பிரான்ஸ் முழுவதும் சட்டத்திற்கு உட்பட்டு பணிகளில் மேற்கொள்பவர்களை வரவேற்கிறேன். ஆனால் Rennes, Bordeaux, Toulouse ஆகிய நகரங்களில் ஊடகவியலாளர்களின் மீது நடத்தப்பட்ட வன்முறையை கடுமையாக கண்டிக்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top