News

புதிய அரசியலமைப்பின் ஊடாக மத்திய அரசாங்கம் பலவீனப்படுத்தப்படும் – கோட்டாபய

புதிய அரசியலமைப்பின் ஊடாக மத்திய அரசாங்கம் பலவீனப்படுத்தப்பட்டு மாகாணசபைகளுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் அனைத்தும் வழங்கப்பட்டு அவை மேலும் பலப்படுத்தப்படவுள்ளதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள விசேட செவ்வி ஒன்றிலேயே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “புதிய அரசியலமைப்பின்படி அதிகாரமுடைய ஜனாதிபதியொருவர் இருக்க மாட்டார். அதேபோன்று அதிகாரங்கள் குவிந்துள்ள நாடாளுமன்றமும் இருக்காது.

இந்நிலையில் மத்திய அரசாங்கம் பலவீனப்படுத்தப்பட்டு மாகாணசபைகளுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் அனைத்தும் வழங்கப்பட்டு அவை மேலும் பலப்படுத்தப்படும்.

இது நாட்டை மிக ஆபத்தான நிலைக்கு இட்டுச்செல்லும். இதனை சமஷ்டி அரசியலமைப்பு என்று கூறமாட்டார்கள்.

வேறு ஏதேனும் பெயர்கள் மூலம் அழைக்கின்றார்கள். புதிய அரசியலமைப்பின் பெயரில் குழப்பம் இல்லை. சொற்களில் குழப்பம் இல்லை.

ஆனால் அந்த அரசியலமைப்பின் வியூகத்திலேயே குழப்பநிலையும், நாட்டைப் பிரிக்கும் சமஷ்டிக்கான அடிப்படைகளும் உள்ளது“ என தெரிவித்துள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top