News

பெட்ரோல் குழாய் வெடித்த பாரிய விபத்து.. பலி எண்ணிக்கை 73 ஆக உயர்வு..

மெக்சிகோவில் பெட்ரோல் குழாய் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 73 ஆக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மெக்சிகோ நாட்டில் திருடர்களால் சேதப்படுத்தப்பட்ட குழாயில் இருந்து 10 ஆயிரம் பேரல் எரிபொருள் பல அடி உயரத்துக்கு பீறிட்டு வெளியேறியது. இதனால் அங்கு திரண்ட ஏராளமான மக்கள் பெட்ரோலை பிடிக்க போட்டி போட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது ஏற்பட்ட தீ விபத்தில் பலர் பலியாகினர். முதற்கட்டமாக 20 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், தீ அணைக்கப்பட்டு உடல்கள் மீட்கப்பட்டன. அப்போது 66 பேர் விபத்தில் பலியானதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் 73 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பலரை காணவில்லை என்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இந்த விபத்தில் 76 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Reuters

மெக்சிகோவின் ஜனாதிபதி லோபஸ் ஓப்ரடார் இச்சம்பவம் குறித்து கூறுகையில், ‘பொருளாதார ரீதியாக மட்டுமின்றி ஏராளமான உயிரிழப்பையும் கண்டு மனம் வருந்தியாவது, எரிபொருள் திருடர்கள் தாங்களாகவே திருந்துவார்கள். இருப்பினும், மீறி திருடுபவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க முடிவு செய்துள்ளேன்’ என தெரிவித்துள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top