News

மண்டைதீவு கிணறுகளில் சடலங்கள் குறித்து விசாரணை!

மண்டைதீவில் உள்ள இரு கிணறுகளில் தமிழ் இளைஞர்களின் சடலங்கள் போடப்பட்டு மூடப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஸ்ரீதரன் எம்.பி வெளியிட்டுள்ள தகவல் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாகவும், இக்கருத்து தொடர்பான மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்வது தொடர்பில் ஏனைய ஆணையாளர்களுடன் கலந்துரையாடி தீர்மானம் எடுக்கப்படும் என்றும் காணாமல்போனோர் அலுவலகத்தின் தவிசாளர் சாலிய பீரிஸ் தெரிவித்தார்.

நேற்று இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன், யாழ்ப்பாணம் மண்டைதீவில் இரு கிணறுகளில் 120 தமிழ் இளைஞர்களின் சடலங்கள் போடப்பட்டு, அவ்விரு கிணறுகளும் கொங்கிறீட்டினால் மூடப்பட்டுள்ளன. உடனடியாக இக்கிணறுகள் தோண்டப்பட்டு அதற்குள் கொன்று போடப்பட்டுள்ள இளைஞர்களின் விபரங்கள் கண்டறியப்பட வேண்டும் எனக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News

To Top