Canada

மூன்று வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதல்; ஒருவர் உயிரிழப்பு!

குறித்த சம்பவத்தில், ஜேன் வீதி மற்றும் வெஸ்டன் வீதிப் பகுதியில் மூன்று வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டதில் படுகாயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விபத்தின் போது மூன்று வாகனங்கள் மோதுண்டு பலத்த சேதங்களுக்கு உள்ளானதாகவும், அவற்றில் ஒன்று தீப்பற்றி எரிந்ததாகவும், விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்தவர் ஆணா அல்லது பெண்ணா என்ற விபரங்களோ, அவரது பெயர் வயது உள்ளிட்ட விபரங்களோ உடனடியாக வெளியிடப்படாத நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த விபத்தினை அடுத்து, குறித்த அந்த பகுதி ஊடான போக்குவரத்துகள் தடை செய்யப்பட்டிருந்த போதிலும், அதிகாலை நான்கு மணிக்கு பின்னராக அவை திறந்து விடப்பட்டுள்ளன.

மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் தீவிர விசாரணை முன்னெடுத்து வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top