News

மெக்சிகோவில் விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஏழு இளைஞர்கள்.. சரமாரியாக சுட்டுத் தள்ளிய மர்ம கும்பல்!

மெக்சிகோவில் விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 7 இளைஞர்களை மர்ம நபர்கள் சுட்டுக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த கொலைச் சம்பவம், மெக்ஸிகோவின் கடற்கரையோர தீபகற்பப் பகுதியின் ரிசார்ட் நகரமான கான்கன்னில் ஞாயிறு அதிகாலை 5 மணியளவில் அரங்கேறியுள்ளது.

மெக்சிகோ நாட்டின் கடற்கரையோர தீபகற்ப பகுதியின் ரிசார்ட் நகரமான கான்கன்னில் விடிய விடிய விருந்து நிகழ்ச்சி நடந்துள்ளது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள 7 இளைஞர்கள் வந்துள்ளனர்.

அதிகாலை வேளையில் திடீரென அங்கு நுழைந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், கையில் வைத்திருந்த துப்பாக்கிகளால் குறித்த இளைஞர்களை சரமாரியாக சுட்டனர். இதில் 7 பேருமே சமப்வ இடத்திலேயே பலியாகினர்.

அதன் பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் விசாரணை மேற்கொண்டனர். துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் போதை மருந்து கடத்தல் கும்பலாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

மெக்சிகோவின் குறிப்பிட்ட பிராந்தியங்களில் சட்டத்திற்கு புறம்பாக நடத்தப்படும் போதை மருந்து வியாபரத்தை கட்டுப்பாட்டிற்கு கொண்டுவருவது தொடர்பாக போட்டி நிலவுவதாக கூறப்படுகிறது.

இதனால் அங்குள்ள இரண்டு மாபியா கும்பல்களுக்கு இடையில் ஏற்படும் சண்டைகள் வன்முறையாக வெடிப்பதாகவும் கூறப்படுகிறது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top