Canada

மேற்கு ஆப்பிரிக்காவில் கடத்தப்பட்ட கனேடியர்! பொலிஸார் தீவிர விசாரணை

மேற்கு ஆப்பிரிக்காவின் புர்கினா பாசோ என்ற பகுதியில் கனேடியர் ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக, தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கடத்தல் சம்பவம் , மாலியின் எல்லைக்கு அருகே ஜிகாதித் தாக்குதல்களில் அச்சுறுத்தல் காரணமாக அரசாங்கம் எச்சரித்துள்ள பகுதியில் நேற்றிரவு இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இன்று (புதன்கிழமை) கருத்து தெரிவித்த அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் கிளமெண்ட் சாவாடோகோ கூறும்போது,

குறித்த நபர் நைஜர் எல்லைக்கு அருகில் ஆயுததாரிகளால் கடத்தப்பட்டுள்ளதாகவும், இதேவேளை குறித்த பகுதியில் கடந்த டிசம்பர் 15 ஆம் திகதி கியூபெக் பெண் மற்றும் அவரது இத்தாலிய தோழரும் கடத்தப்பட்டதாகவும் தகவல் வெளியிட்டுள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top