Canada

மேற்கு எட்மன்டன் பகுதியில் சாலை விபத்து – 31 வயதான நபர் உயிரிழப்பு!

கனடாவின் மேற்கு எட்மன்டன் பகுதியில் இடம்பெற்ற சாலை விபத்தில் சிக்கி காயமடைந்த 31 வயதான நபர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து, கார் ஒன்றும் லொறி ஒன்றும் மோதிக்கொண்டதனாலேயே நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்றுள்ளது.

இதன்போது காயமடைந்த 31 வயதான குறித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே சிகிச்சை பலனின்றி அவர் தற்போது, உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து தொடர்பில் 55 வயதான லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் எட்மன்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, கடும் பனிப்பொழிவினால் வீதி வழுவழுப்பாக காணப்படுவதாகவும் இதனால் மிகுந்த கவனத்துடன் செயற்படுமாறும் பொலிஸார் வாகன சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top