News

ரணிலுடன் நட்பை வெளிப்படுத்திய மஹிந்த! அவசரமாக நாட்டை விட்டுச் சென்ற மைத்திரி

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் கடைசி மகன் ரோஹித ராஜபக்ச மற்றும் டட்யானா இன்று திருமண பந்தத்தில் இணைந்தனர்.

திருமண நிகழ்விற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிரதம விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளார்.

பிரதமருடன் அமைச்சர்களான மங்கள சமரவீர, கபீர் ஹாசிம், சாகல ரட்நாயக்க ஆகியோருக்கும் தனிப்பட்ட ரீதியில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வீரக்கெட்டிய, கால்டன் வீட்டில் தற்போது நடைபெற்று வரும் திருமணத்தின் விசேட விருந்தனராக பிரதமர் ரணில் விக்ரமசிங்க கலந்து கொண்டார்.

இதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் திருமணத்திற்கான அழைப்பு மஹிந்தவினால் விடுக்கப்பட்டது.

ஆனால் சிங்கப்பூருக்கான விஜயத்தில் ஜனாதிபதி ஈடுபட்டுள்ளார். இதன் காரணமாக இன்று திருமண நிகழ்வில் ஜனாதிபதி கலந்து கொள்ளவில்லை.

எனினும் திருமணத்திற்கு முன்னரே மஹிந்தவின் வீட்டுக்கு சென்ற ஜனாதிபதி, மணமக்களை வாழ்த்தியுள்ளார்.

அரசியல் ரீதியாக பல முரண்பாடுகள் இருந்த போதிலும், தனது நண்பரான ரணில் விக்ரமசிங்கவுக்கு மஹிந்த அழைப்பு விடுத்துள்ளார் என அரசியல் மட்டத்தில் பேசப்படுகிறது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top