Canada

ரொறொன்ரோ குடியிருப்பு பகுதியில் கத்திக்குத்து: ஒருவர் உயிரிழப்பு!

ரொறொன்ரோவின் Rockcliffe-Smythe குடியிருப்பு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கத்திக்குத்து தாக்குதலில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த கத்திக்குத்து தாக்குதல், Jane Street மற்றும் St. Clair Avenue பகுதியில், Mould Avenue வில் உள்ள வீடு ஒன்றிலேயே நேற்று(வியாழக்கிழமை) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது காயங்களுடன் காணப்பட்ட ஒருவர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.

காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவருடன் பொலிஸ் அதிகாரி ஒருவரும் சென்றுள்ள போதிலும், குறித்த தகவல் வெளியாகவில்லை.

மேலும், குறித்த அந்த ஆண் கைது செய்யப்பட்டாரா என்ற விபரங்களோ, உயிரிழந்த பெண்ணின் பெயர் வயது உள்ளிட்ட மேலதிக விபரங்கள் ஏதும் குறிப்பிடப்படவில்லை.

இந்தநிலையில், குறித்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top