Canada

ரொறன்ரோ புறநகர் பகுதிகளில் சுற்றிவளைப்பில் 19-பேர் கைது!

ரொறன்ரோ புறநகர் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் மீது 148 போதைப்பொருள் மற்றும் ஆயுத பயன்பாட்டு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளனர்.

அந்தவகையில், டர்ஹாம் பொலிஸார், ராயல் கனேடியன் பொலிஸார், ஒன்ராறியோ மாகாண பொலிஸார், ரொறன்ரோ, பீல், கிங்ஸ்டன் மற்றும் ஹால்டன் பொலிஸார் குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

இதன் போது, 2.1 மில்லியன் டொலர் பணமும் போதைப்பொருள் போன்றனவும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கைது செய்யப்பட்ட 19 பேரில் 14 பேர் டர்ஹாம், ரொறன்ரோ, பீல் மற்றும் கிங்ஸ்டன் பகுதியை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

இவர்களிடம் மட்டும் 600,000 டொலர் பணம், 4 ஆயுதங்கள், 5 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top