Canada

ரொறொன்ரோ பேருந்து விபத்தில் சிக்கி 10 பேர் படுகாயம்!

ரொறொன்ரோவில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் சிக்கி 10 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்து, ரொறொன்ரோ- லோறன்ஸ் கிழக்குப் பகுதியில் நேற்று (திங்கட்கிழமை) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில், அதிவேகத்தில் விரைந்து வந்த பேருந்து வேலியொன்றின் மீது மோதியதைத் தொடர்ந்து இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, காயமடைந்தவர்கள் உள்ளூர் வைத்தியசாலைக்கு உடன் கொண்டு செல்லப்பட்டதாக ரொறொன்ரோ மருத்துவப் பிரிவினர் தகவல் தெரிவிக்கின்றனர்.

மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top