Canada

றொரன்ரோ பகுதியில் ஒருவரது வீட்டில் பயங்கர தீ விபத்து!

 றொரன்ரோவின் மல்வெர்னில் பகுதியில் ஞாயிற்று கிழமை ஒருவரது வீட்டில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த தீ விபத்து, டொரோண்டோவின் ஷெப்பார்டு அவென்யூ மற்றும் மார்க்கம் சாலையின் பகுதியில் 2019 ஜனவரி 20, ஞாயிற்றுக்கிழமை சரியாக இரவு 7:15 -மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இதையடுத்து, குறித்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து வந்த பொலிஸார் மற்றும் பாதுகாப்பு படையினர் கட்டுக்கடங்கா தீயினை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இருப்பினும், குறித்த சம்பவத்தில் வீட்டில் இருந்த அனைவரும் காயங்களின்றி பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

மேலும், குறித்த தீ விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top