Canada

வடக்கு யோர்க் பகுதியில் வீட்டின் மீது தீ பற்றியதில் ஒருவருக்கு நேர்ந்த சோகம்!

வடக்கு யோர்க் பகுதியில் இடம்பெற்ற தீ விபத்தில், அந்த வீட்டில் இருந்த இருவர் மீட்கப்பட்டுள்ளதுடன் அதில் ஒருவர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விபத்தானது, கானசர் டிரைவ், ஸ்டீல்ஸ் மற்றும் பேவ்வியூ பகுதியியில் நேற்று (புதன்கிழமை) அதிகாலை 1:30 மணியளவில் இடம் பெற்றுள்ளது.

இதனை யடுத்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புப்பணியாளர்கள் கட்டுக்கடங்கா தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

மேலும் குறித்த தீ விபத்தானது குப்பை தொட்டியில் இருந்தே உருவாக்கியது என்றும் தெரிவித்தனர்.

அத்தோடு, குறித்த வீட்டில் இருந்து இருவரை மீட்ட தீயணைப்பு வீரர்கள் அவர்களில் ஒருவரை வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் யோர்க் பிராந்திய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest News

To Top