Canada

வின்ட்சர் நெடுஞ்சாலை- 401 பகுதியில் வாகனம் மோதி ஒருவர் உயிரிழப்பு!

வின்ட்சர் பகுதியில் இரண்டு வாகனம் இடையே மோதல் ஏற்பட்டதில் 56-வயது நிறைந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.

Chatham-Kent அருகில் நெடுஞ்சாலை 401, County Road 42 மற்றும் Queens Line பகுதியில் திங்கட்கிழமை மதியம் சரியாக 12-மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இதையடுத்து, குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் காயங்களுடன் இருந்த நபரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இருப்பினும், சிகிக்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

இதில், மற்றொரு வாகனத்தில் இருந்த குறித்த நபர் கையில் காயங்களுடன் தீவிர சிகிக்சை மேற்கொண்டு வருகிறார்.

மேலும், குறித்த பகுதியில் சாலைகள் மூடப்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top