Canada

வின்னிபெக் வாகன மோதலில் பெண் பாதசாரி உயிரிழப்பு!

வின்னிபெக் பகுதியில் இடப்பெற்ற வாகன மோதலில் பெண் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவமானது, வின்னிபெக் ஹெண்டர்சன் ஹைவே மற்றும் ஸ்லேட்டர் அவென்யூ பகுதியில், செவ்வாய்க்கிழமை காலை சுமார் 7:45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இதையடுத்து, குறித்த சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்து விரைந்து வந்த பொலிஸார் காயங்களுடன் இருந்த பெண் பாதசாரியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இருப்பினும், குறித்த சம்பவம் தொடர்பில் வேறு எந்த தகவலையும் பொலிஸார் இதுவரை வெளியிடவில்லை.

மேலும், குறித்த பகுதியில் நெடுஞசாலைகள் மூடப்பட்டு தீவிர விசாரணை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top