Canada

வொண்டர்லேண்ட் வாகன விபத்தில் ஆண் பார்த்தசாரதி உயிரிழப்பு!

வொண்டர்லேண்ட் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஆண் பார்த்தசாரதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவமானது, லண்டன் Commissioners Road West மற்றும் east of Wonderland Road பகுதியில் வெள்ளிக்கிழமை மதியம் சரியாக 2-மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இதில், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார் தீவிர காயங்களுடன் 63 வயதான மனிதன் ஒருவன் இருந்ததாக தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, மருத்துவமனையில் தீவிர சிகிக்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட குறித்த நபர், சிகிக்சை பலனின்றி உயிரிழந்த்துள்ளார்.

இதையடுத்து, குறித்த நெடுஞ்சாலை பகுதிகள் மூடப்பட்டு வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top