Canada

ஹமில்டனில் இருவருக்கு பொலிஸார் வலைவீச்சு: பொதுமக்களின் உதவி கோரல்!

ஹமில்டன் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இருவரை கைது செய்ய பொலிஸார், பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

வூட்லான் அவென்யூவில் உள்ள வீடொன்றில், கடந்த புதன்கிழமை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் 20 வயது மதிக்கதக்க இளைஞன் ஒருநர் காயமடைந்தார்.

எனினும் அவர் உயிராபத்தற்ற நிலையில், தற்போது மருத்துவமனை சிகிச்சை பெற்றுவருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இத்துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இருவரை கைதுசெய்ய பொலிஸார், பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

இதில், ஒருவர் கறுப்பு நிற முடி கொண்ட 6.1 உயரத்தை உடையவர் எனவும், கருப்பு நிற காற்சட்டை மற்றும் ஒரு சாம்பல் குறுகிய ஜெக்கட் அணிந்திருந்தார் எனவும் பொலிஸார் விபரித்துள்ளனர்.

மற்றுமொரு ஆண், வெள்ளை நிற தோற்ற முடையவர் எனவும் தொப்பி, நீல நிற ஜெக்கட் அணிந்திருந்தார் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் இவர்கள் குறித்து தகவல்கள் தெரிந்தவர்கள் தம்மை உடனடியாக தொடர்புக் கொள்ளுமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top