Canada

ஹுவாவி அதிகாரி தன்னை பாதுகாத்துக் கொள்ளலாம்: கனேடிய பிரதமர் தகவல்!

ஹுவாவி நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி தன்னை அமெரிக்காவிற்கு நாடுகடத்தப்படுவதிலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள முடியும் என, கனேடிய பிரதமர் தகவல் தெரிவித்தள்ளார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த பிரதமர் ட்ரூடோ, கனடா ஒரு சட்ட விதிமுறைகளின் கீழ் செயற்படும் நாடு என்பதை நாம் தொடர்ந்து எப்போதும் முன்னிலைப்படுத்தி வருகின்றோம்.

அதன்படி, சட்டத்தின் ஆட்சி ஒழுங்காகவும், முழுமையாகவும் பின்பற்றப்படும் என்பதை நாம் உறுதிசெய்வோம்.

இதற்கமைய தன்னை பாதுகாத்துக் கொள்வதற்கானதொரு வாய்ப்பை கனடாவில் கைது செய்யப்பட்டுள்ள ஹுவாவி அதிகாரி பெற்றுள்ளார். இது எமது நீதித்துறையின் ஒரு அங்கமாகும்.

இதேவேளை, சீனாவில் ஒருதலைப்பட்சமாக கைது செய்யப்பட்டுள்ள கனேடியர்களுக்கு ஆதரவளிப்பதற்கும் நாம் தீவிரமாக முயற்சிப்போம் எனத் தெரிவித்தார்.

முன்னதாக, ஹுவாவி அதிகாரியின் நாடுகடத்தல் தொடர்பான அமெரிக்காவின் முயற்சிகள் தொடர்ந்து வருகின்ற நிலையில், பிரதமர் ட்ரம்ப் நேற்று (புதன்கிழமை) தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சீனாவின் ஹூவாவி நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி Meng Wanzhou கனடாவின் வான்கூவர் விமான நிலையத்தில் வைத்து கடந்த டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்டார்.

இதை தொடர்ந்து, அவரை அமெரிக்காவிற்கு நாடு கடத்துமாறு அமெரிக்கா கோரி வரும் அதேவேளை, அவ்வாறு இடம்பெற்றால் கனடா கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடுமென சீனா எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top