Canada

13-வயது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய 36-வயது நபர் கைது!

கிங்ஸ்டன், ஒன்றியோ பகுதியில் 13-வயது சிறுமியை சமூக வலைத்தளம் மூலமாக பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக 36-வயது நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில், கடந்த டிசம்பர் மாதம் குறித்த 36-வயது நபர் ஒருவர், 13-வயது சிறுமியை சமூக வலைத்தளம் மூலமாக தவறான குறுந்செய்தி பகிர்வின் மூலம் பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார்.

இதையடுத்து, தகவல் தெரிவிக்கப்பட்டத்தின் அடிப்படையில் சோதனை மேற்கொண்டுள்ள பொலிஸார் கடந்த புதன்கிழமை கிங்ஸ்டன் வசிப்பிடத்தை அதிகாரிகள் தேடுதல் செய்தனர்.

பின்னர், குறித்த நபரை கைது செய்த பொலிஸார் அவருடைய டிஜிட்டல் சாதனங்களைப் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து, குறித்த நபர் மீது criminal offences குற்றச்சாட்டு பிரிவில் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top