News

4 பேர் கொடூர கொலை! சிறுமியை காக்க தந்தையை சுட்ட பொலிசார்!

தெற்கு போர்ட்லேண்ட் பகுதியில் மார்க் ககோ என்ற நபர் தனது காதலி உள்ளிட்ட 4 பேரை கொலை செய்த பின் தனது 8வயது மகளை கொலை செய்ய முயற்சித்த போது பொலிசாரால் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

தெற்கு போர்ட்லேண்ட் பகுதியில் வசித்து வருபவர் மார்க்ககோ இவரது பெற்றோர் ஜெரி மற்றும் பாமேலா. ககோ-விற்கு ஏற்கனவே திருமணமாகி 8வயதில் குழந்தை உள்ளது. இந்நிலையில் அவருடன் அவரின் காதலியான சாயினாவும் அவர்களுக்கு பிறந்த ஒலிவா என்ற பெண்குழந்தையும் உள்ளனர்.

சம்பவத்தன்று காலையில் ககோ தனது தாய், தந்தை மற்றும் காதலியையும் குழந்தை ஒலிவாவையும் கொலை செய்து ரத்தபடிவங்கள் இருந்துள்ளன.

இதை பார்த்த பக்கத்து வீட்டு குழந்தை அவளின் பெற்றோரிடம் கூறியுள்ளது. அதிர்ந்து போன அவர்கள் அவசர உதவி எண்ணிற்கு அழைத்து தகவல் கூறியுள்ளார்.

இந்நிலையில் அங்கு வந்து பார்க்கும்போது ககோ 8வயது சிறுமியை கொலை செய்ய கட்டி வைத்து தனது கையிலிருந்த ஆயுதத்தால் தாக்க முற்பட்டுள்ளார். இதை பார்த்த பொலிசார் அவரை சுட்டனர் இதில் அவர் சம்பவ இடத்தில் பலியானார்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த பொலிசார் எதற்காக கொலை செய்யப்பட்டனர் என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இது குறித்து பொலிசார் தெரிவிக்கையில், அவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு ஆயுதங்களால் கொலை செய்யப்பட்டதுபோல் உள்ளது.

அதை குறித்து ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ளனர். தொடர்ந்து ககோ ஆயுதம் தயாரித்த குற்றத்திற்காக ஏற்கனவே கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் என்றும் தெரிவித்துள்னர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top